இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடி வசூலையும் தொட்டிருக்கிறது. இப்படியான வெற்றியை தொடர்ந்து நேற்றைய தினம் இப்படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக அறிமுகமான `ஓ மை கடவுளே’ திரைப்படத்தை நடிகர் மகேஷ் பாபு பார்த்துவிட்டு அப்படம் பற்றி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு `ஓ மை கடவுளே’ படத்தை டோலிவுட்டின் அனைத்துப் பக்கங்களுக்கும் கொண்டுச் சென்றது. இது குறித்து நேற்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “ `ஓ மை கடவுளே’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் மகேஷ் பாபு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதன் பிறகு மொத்த தெலங்கு சினிமாவுக்கும் அத்திரைப்படம் பரிச்சயமானது. இத்திரைப்படத்தை அவர் பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன். அவர் இப்படத்தைப் பார்த்தால் நிச்சயமாக இப்படத்திற்கு அது பெருமையானதாக இருக்கும். இந்த மெசேஜ்ஜை அவரிடம் தெரிவியுங்கள்.” எனக் கூறியிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன்
இதே நிகழ்வில் நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் `பார்ப்பதற்கு தனுஷ் மாதிரி இருக்கிறீர்கள் எனப் பலரும் சொல்லும் கமென்ட் உங்களுக்கு ப்ளஸா அல்லது மைனஸா?’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதீப், “ எனக்கு தெரியவில்லை சார். நான் கண்ணாடியைப் பார்க்கும்போது நான் என்னை மட்டும்தான் பார்ப்பேன். என்னுடைய திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நல்ல வேலைகளை நான் செய்துக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்றார். இந்த கேள்விக்கு அஸ்வத் மாரிமுத்து, “ உங்க கண்களுக்கு அந்த நடிகரைப் போலவே இருப்பதாக தெரிகிறது. ஆனால், என்னுடைய கண்களுக்கு பிரதீப் ரங்கநாதன், பிரதீப் ரங்கநாதனாகவேதான் தெரிகிறார்.” எனப் பதிலளித்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
