பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபாமா, கயடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “உங்கள்ல ஒருத்தனை இங்க நிக்க வச்ச உங்களுக்கு முதல்ல நன்றி. உழைச்சா மேல வந்திடலாம்ங்கிற விஷயத்துக்கு வி.ஜே சித்து ஒரு எடுத்துக்காட்டு. சில வருஷங்களுக்கு முன்னாடி அவங்களோட `ஃபன் பண்றோம்’ நிகழ்ச்சியைப் பார்த்து அவங்களுக்கு அப்போ மெசேஜ் பண்ணினேன். அப்போ அவங்க `என்ன வாழ்க்கை டா இது’னு சோகமாக சொல்லியிருப்பாங்க. இன்னைக்கு அவங்க வாழ்க்கை அப்படி இல்லை. `லவ் டுடே’ படத்துல என்கூட நடிக்கிறதுக்கு சில ஹிரோயின்ஸ் தயங்குனாங்க. சில பேர் நான் கோமாளி படத்தோட டைரக்டர்னு ஆர்வமாக கேட்பாங்க. அதன் பிறகு நான்தான் ஹீரோவாக நடிக்கப்போறேன்னு சொன்னதும் டேட் இல்லைனு சொல்லிடுவாங்க.

சிலர் இந்தப் படத்துல பெர்ஃபாமென்ஸுக்கு அளவு அதிகமாக இருக்குனு சொல்லி நடிக்காமல் கடந்திடுவாங்க. சிலர் வெளிப்படையாகவே பெரிய ஹீரோஸ்கூட நடிக்க விரும்புறேன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கெல்லாம் நன்றியை தெரிவிச்சுக்கிறேன். பிறகு, இந்தப் படத்துக்கு அனுபாமா ஹீரோயின்னு சொன்னாங்க. நினைச்சுக்கூட பார்த்திருக்கமாட்டோம். `ப்ரேமம்’ படம் வந்த சமயத்துல காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். மிஷ்கின் சார் தினமும் எனக்கு கிஃப்ட் கொடுப்பாரு. என்னுடைய மேக் அப் மேன் பிறந்தாள் அன்னைக்கு அவர் கையில எதுவுமே இல்ல.
உடனடியாக அவருடைய கையில இருந்த வாட்சை உடனடியாக கழட்டிக் கொடுத்திட்டாரு. அவர் இந்தப் படத்துக்கு கிடைச்ச கிஃப்ட். சிம்பு சார் இந்தப் படத்துல ஒரு பாடல் பாடியிருக்கார். என்ன கிடைக்கும்னு பார்க்காமல் என்ன பண்ணலாம்னு யோசிச்ச உங்களுடைய தங்க மனசுக்கு நன்றி சார். இந்தப் படத்தோட உண்மையான டிராகன் அஸ்வத் மாரிமுத்துதான். ” என்றவர், “ அரியர் மாஸ் கிடையாது. படிச்சாதான் மாஸ். நான் 12-ம் வகுப்புல 89 சதவீதம் மதிப்பெண் எடுத்து. கல்லூரியில 80 சதவீதம் மதிப்பெண் எடுத்து.

நிறைய புத்தகங்கள் படிச்சுதான் இங்க வந்திருக்கேன். படிப்பு ரொம்ப முக்கியம். அப்படியான விஷயத்தைதான் இந்தப் படம் பேசும். இந்த நேரத்துல என்னை சிலர் அடிக்கதான் செய்யுறாங்க . ஒரு செடி வளரும்போதும் அதோட இலையைப் பிச்சு போடுவாங்க. சிலர் அந்த செடியை மிதிப்பாங்க. அதனுடைய வேர் கீழ உறுதியாக பிடிச்சுட்டுதான் இருக்கும். அந்த சமயத்துல செடி வர்ற வலியெல்லாம் தாங்கிடுச்சுனா அது மரமாக வர்றதை யாராலையும் தடுக்க முடியாது. அந்த செடிக்கு தண்ணீர் கொடுத்தவங்களுக்கும் நன்றி.” எனக் கூறி முடித்துக் கொண்டார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play