இதற்கு ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தரப்பில், “பெற்ற முன் பணத்திற்கு நடித்து தருவதே நியாயம் என்று எந்த சங்கத் தலைமைகளுக்கும் தெரியவில்லையா?” என்று கேட்டிருந்தார்.
இன்று மதியம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, “தனுஷ் வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு படம் செய்துக் கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம், கால்ஷிட்தான் வாங்கித் தர வேண்டும்” என்று கூறிருந்தனர்..
இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து சர்ச்சையாகி வரும் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசிய ஆர்.கே.செல்வமணி, “தனுஷ் – ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனப் பிரச்னையை நடிகர் சங்கத்தை வைத்துப் பேச வேண்டும். நடிகர் சங்கம் – தயாரிப்பாளர் சங்கம் சேர்ந்து பேசி அதைத் தீர்க்க வேண்டும். அதுதான் நல்லது.

நாங்கள் அதைப் பேசும்போது நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. அப்போது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தினர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். “நாங்கள்தான் நியாயம் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் போனோம்’ என்று அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால், அதைச் சொல்லாமல் அமைதி காக்கின்றனர். இதனால் நாங்கள் பலரையும் பகைத்துகொள்ளும்படியாக இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.