தனுஷ் நடிப்பில் உருவாகும் `தேரே இஷ்க் மெயின் (Tere Ishq Mein)” படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. `ராஞ்சனா’, `Atrangi Re’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பாலிவுட் திரைப்படம் `தேரே இஷ்க் மெயின்’. இப்படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை கிர்த்தி சனூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜெய்பூரில் நேற்றைய தினம் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான IIFA டிஜிட்டல் விருது விழாவில் பங்கேற்ற நடிகை கிர்த்தி சனூன் இத்திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.