Dhanush : டெல்லியில் பாலிவுட் படப்பிடிப்பு; வெளிநாட்டில் இட்லி கடை பாடல்! - தனுஷ் | Exclusive Update | dhanush movies tere ishq mein, idly kadai, kubera shoot update exclusive

Dhanush : டெல்லியில் பாலிவுட் படப்பிடிப்பு; வெளிநாட்டில் இட்லி கடை பாடல்! – தனுஷ் | Exclusive Update | dhanush movies tere ishq mein, idly kadai, kubera shoot update exclusive


Dhanush Exclusive

பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் “தேரே இஷ்க் மெய்க்’ படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ‘இட்லி கடை’ படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன், தமிழரசன் பச்சமுத்து இவர்களில் யாராவது ஒருவரின் படமாக இருக்ககூடும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் இந்தியில் நடித்து வருகிறார்.

டெல்லி படப்பிடிப்பில்

டெல்லி படப்பிடிப்பில்

‘இட்லி கடை’

நடிப்பு, இயக்கம் என தனுஷ் இரவு பகல் பாராமல், பம்பரமாக உழைத்து வருகிறார். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரிலீஸுக்கு பின்னர், ‘இட்லி கடை’யை இயக்கி முடித்துவிட்டார் தனுஷ். இந்த படத்தில் அவர் நடிப்பதுடன், இயக்கவும் செய்திருக்கிறார்.

அருண்விஜய், ராஜ்கிரண், சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், நித்யாமெனன், ஷாலினி பாண்டே என பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்து முடிந்திருக்கிறது. மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தாலும், இன்னம் ஒரு பாடல் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த பாடலை வெளிநாட்டில் படமாக்குகின்றனர். தனுஷ், ஷாலினி பாண்டே காம்பினேஷனில் பாங்காக்கில் அந்த பாடல் படமாகலாம் என்கின்றனர்.

கிர்த்தி சனூன்

கிர்த்தி சனூன்

இதற்கிடையே தனுஷ் இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தின் இயக்கத்தில் ‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’ என இரண்டு படங்களில் தனுஷ் நடித்திருக்கிறார். ஆனந்தும், தனுஷுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் கீர்த்தி சனூன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *