Delhi Ganesh : நடிகர் 'டெல்லி' கணேஷ் இயற்கை எய்தினார் - அதிர்ச்சியில் கலையுலகம்!

Delhi Ganesh : நடிகர் 'டெல்லி' கணேஷ் இயற்கை எய்தினார் – அதிர்ச்சியில் கலையுலகம்!


கோலிவுட்டின் பிரபலமான குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார்.

DSC09844 Thedalweb Delhi Ganesh : நடிகர் 'டெல்லி' கணேஷ் இயற்கை எய்தினார் - அதிர்ச்சியில் கலையுலகம்!
`டெல்லி’ கணேஷ்

81 வயதை எட்டியிருக்கும் நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று இரவு திடீரென அவர் உயிரிழந்திருக்கிறார். மூத்த குணச்சித்திர நடிகராக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் என்பதால் அவரின் இழப்பு திரையுலகிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

1944 இல் பிறந்த இவர் டெல்லியில் விமானப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்திருக்கிறார். 1965 காலக்கட்டத்தில் இந்திய சீனா போர் நடந்துகொண்டிருந்த சமயத்திலும் அங்கேதான் பணியாற்றியிருக்கிறார். இதனால்தான் அவருக்கு ‘டெல்லி’ கணேஷ் என பெயர் வந்தது.

1970 களிலிருந்தே தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். 1976 கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படம்தான் இவரின் அறிமுகப் படம். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல கதாபாத்திரங்களிலும் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசனின் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, ஔவை சண்முகி, பாபநாசம் என ஒரு டஜன் படங்களில் கமலுடன் நடித்திருப்பார்.

DSC09853 Thedalweb Delhi Ganesh : நடிகர் 'டெல்லி' கணேஷ் இயற்கை எய்தினார் - அதிர்ச்சியில் கலையுலகம்!
`டெல்லி’ கணேஷ்

கமலுக்கு பிடித்தமான நடிகர்களில் இவரும் ஒருவர். விஜய், அஜித், சூர்யா தொடங்கி சிவகார்த்திகேயன் வரைக்கும் இளம் நடிகர்களுடனும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இவரின் பல காட்சிகளை 2 கே கிட்கள் மீம்களாக மாற்றி சமூக வலைதளங்களிலும் இவரை கொண்டாடி வருகின்றனர்.

கலைமாமணி உட்பட பல விருதுகளை வாங்கியிருக்கும் அவர் திடீரென இயற்கை எய்தியிருப்பது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *