டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

71 / 100

கொடுமையான விடயம் என்னவென்றால், உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது உங்களுக்கே தெரியாது. அதுதான் மால்வேர் ஆப்களின் மோசமான தந்திரம்!

பாதிக்கப்பட்டவர்கள் யாருமே மால்வேர் ஆப்களை (Malware) அவ்வளவு ஈஸியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். தனிப்பட்ட விவரங்களை இழந்தவர்களுக்கும், எதற்கு பார்க்கிறோம்? ஏன் பார்க்கிறோம்? என்று தெரியாமல் அடுக்கடுக்கான விளம்பரங்களை பார்த்தவர்களுமே அந்த வலி தெரியும்; அந்த வலியில் கூகுள் (Google) நிறுவனத்திற்கும் ஒரு பெரிய பங்கு உண்டு!

Malware App

ஏனெனில்.. எல்லா பிரச்சனைகளுமே Play Store-இல் தானே தொடங்குகிறது?

androidmalwareinfection Thedalweb டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!
டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

பலவகையான பாதுகாப்பபு ஏற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுருந்தாலும் கூட, கூகுள் நிறுவனத்தால் பிளே ஸ்டோருக்குள் “நுழையும்” மால்வேர் ஆப்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பதே உண்மை. அந்த வரிசையில் புதிதாக 35 மால்வேர் ஆப்கள் சேர்ந்துள்ளது! பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான Bitdefender-இன் கூற்றுப்படி, புதிதாக கண்டறியப்பட்டுள்ள 35 மால்வேர் ஆப்களுமே இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை சந்தித்து உள்ளன. மேலும் வழக்கம் போல பலரின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிக்கின்றன மற்றும் தேவையற்ற விளம்பரங்களை காட்டுகின்றன.

பெயரை மாற்றிக்கொள்ளும்.. ஐகானை மாற்றிக்கொள்ளும்!

malwareavoidtip Thedalweb டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!
டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

Bitdefender-இன் பிளாக் போஸ்டின் படி, இந்த ஆப்கள் தத்தம் பெயர்களையும், ஐகான்களையும் “மாற்றிக் கொண்டு” ஒரு ஸ்மார்ட்போனில் தன் இருப்பை மறைத்து கொள்கின்றன, பின்னர் ஆக்கிரமிப்பு மிகுந்த (கட்டயாமான) விளம்பரங்களை வழங்க தொடங்குகின்றன”. எடுத்துக்காட்டுக்கு GPS Location என்கிற ஆப் ஆனது இன்ஸ்டால் செய்யப்பட்டதும், அதன் பெயரை “Settings” என மாற்றுகிறது. அதாவது நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய ஆப்ஸ் பட்டியலில் இதுபோன்ற மால்வேர் ஆப்களின் பெயர் காட்டப்படாமல் போகலாம், அதனால் அவைகள் இயங்குவதை உங்களால் அறிந்துகொள்ள முடியாமல் போகலாம்!

Popular Category-களில் பரவி கிடக்கின்றன!

ஆபத்தான மால்வேர் ஆப்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள “அந்த” 35 ஆப்களும் ஜிபிஎஸ், போட்டோ பில்டர்ஸ், வால்பேப்பர்ஸ் என மிகவும் பிரபலமான Categories-களில் பரவி உள்ளன. மேலும் அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான டவுன்லோட்களை சந்தித்து உள்ளன. ஆண்ட்ராய்டு ஆப்களில் விளம்பரங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன என்றாலும் கூட, இந்த குறிப்பிட்ட மால்வேர் ஆப்கள் அவற்றின் சொந்த Framework-ஐ பயன்படுத்துகின்றன. அதாவது தீங்கிழைக்கும் வேலைகளை செய்கின்றன!

googlealert Thedalweb டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!
டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

அந்த 35 மால்வேர் ஆப்களின் பட்டியல் இதோ!

Walls light – Wallpapers Pack

Big Emoji – Keyboard Grad

Wallpapers – 3D Backdrops Engine

Wallpapers – Live & 3D Stock

Wallpapers – 4K & HD

EffectMania – Photo Editor

Art Filter – Deep Photoeffect

Fast Emoji Keyboard

Create Sticker for Whatsapp

Math Solver – Camera Helper

டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!
டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

போட்டோ பிக்ஸ் எபெக்ட் முதல் கலரைஸ் ஓல்ட் போட்டோ வரை!

Photopix Effects – Art Filter

Led Theme – Colorful Keyboard

Keyboard – Fun Emoji, Sticker

Smart Wifi

My GPS Location

Image Warp Camera

Art Girls Wallpaper HD

Cat Simulator

Smart QR Creator

Colorize Old Photo

keepupdateupiappss Thedalweb டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!
டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

ஜிபிஎஸ் லோக்கேஷன் ஃபைண்டர் முதல் ஸ்லீப் சவுண்ட்ஸ் வரை!

GPS Location Finder

Girls Art Wallpaper

Smart QR Scanner

GPS Location Maps

Volume Control

Secret Horoscope

Smart GPS Location

Animated Sticker Master

Personality Charging Show

Sleep Sounds

deteletheseappsnew 1 Thedalweb டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!
டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

உடனே Uninstall அல்லது Delete செய்யவும்!

QR Creator

Media Volume Slider

Secret Astrology

Colorize Photos

Phi 4K Wallpaper – Anime HD

மேற்குறிப்பிட்ட 35 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும் கூட, அதை உடனே அன்இன்ஸ்டால் அல்லது டெலிட் செய்யவும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மால்வேரின் “நுழைவை” தவிர்ப்பது எப்படி?

மால்வேர் ஆப்களால் பாதிக்கப்படுவதை தவிர்க்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் எந்தவொரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பும், சில சின்ன சின்ன சோதனைகளை செய்ய வேண்டும். – அதிக எண்ணிக்கையிலான டவுன்லோட்ஸ் மற்றும் ரிவ்யூஸ் இல்லையா? – தவிர்த்து விடவும்! – எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கிறதா? – அன்இன்ஸ்டால் செய்து விடவும் (ஏனெனில் பிற ஆப்களை ஈர்க்கும் திறன் கொண்ட மால்வேர் ஆப்கள் தான் எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கும்) – கூகுள் பிளே ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான இடம் தான். ஆனாலும் அவ்வப்போது, திட்டமிடுவது போல் விஷயங்கள் நடப்பதில்லை, எனவே நீங்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம்.

டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

Related Articles :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *