மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிசிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் சமுத்திரக்கனி கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
மேடையில் பேசிய அவர், “‘கல்லூரி முடித்துச் சென்னை வந்தபோது நிறைய கம்யூனிஸ்ட் தோழர்களைச் சந்தித்தேன். எங்கள் இயக்குநர் வெற்றி மாறன் சாரைப் பார்க்கும்போது ஒரு சிவப்பு சிந்தனை வரும்.

‘தறியுடன்’ என்ற ஒரு நாவல். அதனை சாரின் உதவி இயக்குநர் ‘சங்கத்தலைவன்’ என்ற தலைப்பில் படமாக இயக்கினார். அதனை வெற்றி மாறன் சார் தயாரித்தார்.
தறித்தொழிலாளர்களின் பிரச்னையை அந்தப் படம் எடுத்துரைத்தது. ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற படங்கள் மூலம் என்னை ஒரு தளத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றார்.
ஒரு நாள் ‘காவல் கோட்டம்’ நாவலைப் படித்து வியந்துபோனேன். அந்த எழுத்தாளரைச் சந்தித்துப் பேசினேன். அதன் மூலம் சில விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.
இப்படி என்னைச் சுற்றி இருக்கும் நிறையப் பேர் என் கைகளைப் பிடித்து இந்த சிந்தனையுடன் நகர்த்திக்கொண்டு செல்கிறார்கள்.