மேற்கத்திய பாணியிலான லுக்குடன் போட்டோ ஷூட் நடத்தி நடிகை தமன்னா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் பலவும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
2006-ல் ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் நடிகை தமன்னா. ‘கல்லூரி’, ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘சூறா’ என வரிசையாக பல படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர்.
‘பாகுபலி’ ஆக்ஷன் அழகுடன் கவர்ந்தவர் தமன்னா. கடைசியாக தமன்னாவை தமிழில் ‘அரண்மனை 4’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் கண்டனர் தமிழ் ரசிகர்கள்.
‘ஜெயிலர்’ படத்தில் ‘காவலய்யா’ பாடலில் நடனத்தில் மிரட்டி வைரல் வேட்டையாடினார் தமன்னா. அவரது நடிப்பில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் மகத்தான சாதனை படைத்தது.
நீரஜ் பாண்டே இயக்கத்தில் தமன்னா நடித்திருந்த ‘சிகந்த கா முகாதர்’ நெட்ஃப்ளிக் ஓடிடி தளத்தில் கவனம் ஈர்த்தது.
2023-ல் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரின் மூலம் விஜய் வர்மா – தமன்னா இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். மும்பையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். ஆனால், இந்த உறவு நீடிக்கவில்லை.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து, நண்பர்களாக மட்டுமே உறைவைத் தொடர முடிவு செய்தனர்.
இந்த பிரேக்கப்புக்கு அடுத்தடுத்து படங்களின் அணிவகுப்புடன் தமன்னா பிஸியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தெலுங்கில் ‘ஓடிலா 2’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. இதன் டீசர் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘ஒடிலா 2’ திரைப்படத்தின் சிவன் பக்தராக நடித்துள்ளார் தமன்னா.
தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவரது அடுத்த தமிழ்ப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.