நடிகை கவுரி கிஷனின் சமீபத்திய இன்ஸ் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது.
தமிழில் கடந்த 2018-ல் வெளியான விஜய் சேதுபதியின் ‘96’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கவுரி கிஷன்.
கேரளாவைச் சேர்ந்தவரான இவர் அடுத்து ‘மார்க்கம்களி’ மலையாள படத்தில் நடித்தார்.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார்.
‘புத்தம் புது காலை விடியாதா’ ஆந்தாலஜி மற்றும் ‘பிகினிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘அடியே’ படத்தில் கவனம் பெற்றார்.
கடைசியாக ‘ஹாட்ஸ்பாட்’, ‘போட்’ படங்களில் கவுரி கிஷன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கவுரி கிஷன் அவ்வப்போது பகிர்வுகளை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருவது கவனிக்கத்தக்கது.