நடிகை ஜோதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளன.
தமிழ் சினிமாவில் 2000-த்தின் தொடக்கத்தில் கொடிகட்டி பறந்தவர் ஜோதிகா.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர்.
தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்தவர் ஜோதிகா.
நடிப்புக்காக பாராட்டப்படும் வெகு சில நடிகைகளில் ஒருவர்.
தூள், பூவெல்லாம் உன் வாசம், தெனாலி, டும் டும் டும், ரிதம், 12பி, சந்திரமுகி, மொழி என பல படங்களில் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவுடன் ஜோதிகாவுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு நாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா