தமிழில் கவனம் ஈர்த்து வரும் நடிகை பிரக்யா நாக்ராவின் காதலர் தின சிறப்புப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா நாக்ரா.
அடுத்து 2023-ல் வெளியான ‘N4’ படத்தில் நடித்தார் பிரக்யா.
2023-ல் மலையாளத்தில் வெளியான ‘நதிகளில் சுந்தரி யமுனா’ மூலம் மலையாள திரையுலகிலும் நுழைந்தார் பிரக்யா.
‘நதிகளில் சுந்தரி யமுனா’ படத்தின் யமுனா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
‘லக்கம்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார் பிரக்யா.
சமூக வலைதளங்களிலும் பிரக்யாவை கணிசமானோர் பின் தொடர்கின்றனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு தமிழில் இவர் நடித்துள்ள ‘பேபி & பேபி’ இன்று வெளியானதில் குஷியாக இருக்கிறார் பிரக்யா நாக்ரா.
காதலர் தினத்தை முன்னிட்டு ‘ரெட்’ மயமாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார் பிரக்யா நாக்ரா.