அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் வியாழக்கிழமை (பிப்.6) ரிலீஸாகிறது. இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கத்தக்க அம்சங்கள் குறித்து இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்தவற்றில் இருந்து சில தகவல்கள்…
“விடாமுயற்சி படத்தின் மூலக் கதை என்னுடையது இல்லை. அஜித் இமேஜுக்கும் இந்தப் படத்துல அவர் பண்ணியிருக்கிற கேரக்டருக்கும் தொடர்பே இல்லை.”
“விடாமுயற்சி ஒரு ஒரு மாஸ் என்டர்டெயினர் படம் இல்லை. ரசிகர்கள் அதை எதிர்பார்த்து வரவேண்டாம். அஜித் தான் இப்படி படம் பண்ணணும்னு ஆசைப்பட்டார்.”
“அஜித்துக்கு உள்ள பிம்பத்துக்கு முற்றிலும் முரண்பாடா ‘விடாமுயற்சி’ இருக்கும். இதுல ஒரு சூப்பர் ஹீரோவை எதிர்பார்த்து வந்தீங்கன்னா, அப்படி இருக்காது.”
“நம்மள்ல ஒருத்தன் ஹீரோவா இருந்தா எப்படியிருக்குமோ அதுதான் ‘விடாமுயற்சி’. இந்தப் படம் என்னையும் அஜித்தையும் ‘கம்ஃப்ர்ட் ஸோன்’ல இருந்து வெளிய வரவெச்சுது.”
“ரசிகர்கள் தங்களோட முன் முடிவுகளை கழற்றி வச்சுட்டு ‘விடாமுயற்சி’ படத்தை பார்த்தால், நிச்சயமா சுவாரஸ்யமான படமா இருக்கும்.”
“ஒரு பயணம் தொடர்பான கதைதான் ‘விடாமுயற்சி’ படம். இது, கணவன் – மனைவியோட பயணம். அதுக்கு இடையில நடக்கிற சம்பவங்கள்தான் திரைக்கதை.”
“ஆக்ஷன், கார் சேஸிங், சஸ்பென்ஸ், த்ரில்லிங் விஷயங்கள் எல்லாமே ‘விடாமுயற்சி’யில இருக்கும். ஆனா, எதார்த்தத்துக்கு நெருக்கமா இருக்கும்.”
“அஜித் – அர்ஜுன் இடையிலான உரையாடல்கள், மோதிக்கிற தருணங்கள் பார்வையாளர்களை உட்கார வைக்கும். அதுக்கு அவங்களோட நடிப்பு தான் காரணமா இருக்கும்.”
“விடாமுயற்சி படத்துல நல்ல கதை இருக்கு. நாயகியாக த்ரிஷா நடிச்சிருக்காங்க. குடும்பத்தோட ரசிக்கக் கூடிய கதை. பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.”
“விடாமுயற்சி கதை தற்போது நடக்கிற மாதிரியும், 12 வருஷத்துக்கு முன்னால நடக்கிற மாதிரியும் இருக்கு. வித்தியாசத்தை காட்ட ரொம்ப மெனக்கெட்டு, உடலைக் குறைச்சார் அஜித்.”
“விடாமுயற்சி படத்துல கேரக்டருக்கு ஏத்தபடி உடம்பை குறைச்சி ரொம்ப ‘ஃபிட்’டா இருக்கார் அஜித். படத்துல அந்தக் காட்சிகள் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.”
“இவ்வளவு அழகான, ஸ்டைலான, பவர்ஃபுல்லான அஜித்தை சீனுக்கு சீன் ஆச்சரியத்தோடு ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.