ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பு இல்லை: வழக்கறிஞர் விளக்கம் | AR Rahman Saira divorce no link with Mohini Dey Lawyer
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியர் தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் விடை கொடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்நிலையில், நேற்றைய தினம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்தார். இதை ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்துடன் தொடர்புப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் சாய்ரா தரப்பு வழக்கறிஞர் வந்தனா […]