காணாமல் போன தன் காதலியை (அம்மு அபிராமி) தேடிக்கொண்டிருக்கிறான் பள்ளி மாணவன் ஶ்ரீ (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்). மறுபுறம், அப்பெண்ணின் தந்தையும் ஶ்ரீயின் ஆசிரியருமான வசந்த் (ரகுமான்), காவல்நிலையம் சென்று ஆய்வாளர் செல்வத்திடம் (சரத்குமார்) புகாரளிக்கிறார். மறுபுறம், சினிமா இயக்குநராகும் கனவோடிருக்கும் வெற்றிக்கு (அதர்வா), அவரின் வாழ்க்கையையே தலைகீழாக்கும் அளவிற்குப் பெரிய பிரச்னை வரவே, அக்கவலையிலிருந்து தப்பிக்கப் போதையில் சுற்றிக்கொண்டிருக்கிறார். இந்த மனிதர்களும், அவர்களின் பிரச்னைகளும் ஓர் இரவில் சந்தித்துக்கொள்கின்றன. அப்போது வெளிப்படும் அவர்களின் உண்மை முகங்களும் நிறங்களும்