‘மதகஜராஜா’ படத்துக்கு வரவேற்பு: திரையரங்குகள் அதிகரிப்பு | audience Reception for Madhagajaraja film theaters increase
‘மதகஜராஜா’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. பல்வேறு பிரச்சினைகளை கடந்து 12 ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு யாருமே எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகளில் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளானது. இதனால் இப்படம் தான் 2025-ம் ஆண்டு முதல் வெற்றியாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள். ‘கேம் சேஞ்சர்’, […]