அஜித்தின் ‘விடாமுயற்சி’ முதல் சிங்கிள் வெள்ளிக்கிழமை ரிலீஸ்! | Vidaamuyarchi first single titled Sawadeeka
சென்னை: அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கிள் டிச.27 அன்று வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கிள் வெள்ளிக்கிழமை (டிச.27) […]