Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா…’ அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்’? | ashwath marimuthu pradeep ranganathan combo dragon movie reivew
டெம்ப்ளேட்டான ‘ஸ்ட்ரிக்ட் கல்லூரி முதல்வர்’ கதாபாத்திரத்தில் வந்தாலும், அதன் வோல்டேஜை அறிந்து, பக்குவமான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார் மிஷ்கின். அவரின் பாத்திரப் படைப்பும் வில்லனிசத்துக்குள் நுழையாமல் நியாயத்தின் பக்கம் நிற்பது முதிர்ச்சியானதொரு எழுத்து! ஜார்ஜ் மரியம், இந்துமதி மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. கௌதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் வந்து போகிறார்கள். விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆகியோரின் கலகல மோடு நடிப்பை, கச்சிதமாகத் திரைக்கதைக்குப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கலர்ஃபுல் காலேஜ் ஸ்டோரிக்குத் தேவையான ஒளிப்பதிவைக் […]