Cinema Roundup: `கூலி' படத்தில் எஸ்.கே?; ஒன்றிணையும் இயக்குநர்கள் -இந்த வார டாப் சினிமா தகவல்கள்
இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். இயக்குநர்களின் சங்கமம்! `ஓ மை கடவுளே’ திரைப்படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம் `டிராகன்’. இந்த `டிராகன்’ திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் என மூன்று இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்களாம். இந்த அறிவிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து `My lovable directors’ எனப் பதிவிட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதுமட்டுமல்ல, யூ-ட்யூப்பை கலக்கிக் கொண்டிருக்கும் […]