சமூக வலைதளங்களில் பாராட்டினால் முத்திரை குத்தும் போக்கு: நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை | Preity Zinta expresses frustration over online trolling
சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நச்சுத்தன்மை குறித்து பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரீத்தி ஜிந்தா. இவர் கடந்த 2016 முதல் பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கடந்த 2016-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜீன் குட்இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2021-ல் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் பிரீத்தி. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராக இருக்கிறார். […]