வீட்டில் உள்ள பெண்களுக்கு மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தினமும் என்ன சமையல் செய்வது என்பதுதான்.
தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி, என்ன சாப்பிட்ட வெறுப்பாக இருப்பார்கள். இதனால் குழந்தைகள் சாப்பிடவே அடம்பிடிப்பார்கள்.
கொஞ்சம் வித்தியாசமாக செய்தால் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.
நாம் சுவையான வாழைப்பூ சப்பாத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – அரை கிலோ
பாசிப்பருப்பு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 3,
பூண்டு – 4 பல்,
நறுக்கிய வாழைப்பூ – இரண்டு கைப்பிடி அளவு
எண்ணெய் – தேவையான அளவு,
தயிர் – 4 டீஸ்பூன்.
செய்முறை : Chapati Banana Flower Making
பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாழைபூவுடன் நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் உப்பு சேர்த்து வாணலில் வதக்கவும் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் வானிலை இறக்கி வைத்துவிட வேண்டும் . வதக்கியவுடன் நன்றாக ஆறவைக்கவும் அதனை மிக்ஸியில் போட்டு நைசாக வரும்வரை அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவை கோதுமை மாவுடன் சேர்த்து தயிர் உப்பு தேவையான அளவு நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து பிசைந்த மாவினை தேய்த்து கல்லில் சுட்டு எடுக்கவும் .சுவையான வாழைப்பூ சப்பாத்தி ரெடி.Chapati Banana Flower Making