Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது முத்துதான்'- மா.கா.பாவுக்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள்

Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது முத்துதான்'- மா.கா.பாவுக்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள்


பிக் பாஸ் சீசன் 8 கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது.

போட்டியாளர் பலரும் இறுதிக்கட்டத்தை நோக்கி பரபரப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். டாப் 6 போட்டியாளர்களுடன் எவிக்டான மற்ற போட்டியாளர்களும் விருந்தினராக பிக் பாஸ் வீட்டில் தற்போது வலம் வருகிறார்கள்.

இதை தாண்டி பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பணப்பெட்டியும் சில டிவிஸ்ட்களுடன் இம்முறை களமிறங்கியிருக்கிறது. முதல் பெட்டியை முத்துக்குமரனும், இரண்டாவது பெட்டியை ரயானும் தன் வசப்படுத்தியிருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் நடிகர் ஹரி பாஸ்கர், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் லாஸ்லியா, ராஜு என மூவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்து அவரவர் நடித்திருக்கும் திரைப்படங்களை விளம்பரப்படுத்தினார்கள்.

VS YouTube 0 22 Thedalweb Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது முத்துதான்'- மா.கா.பாவுக்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள்
Soundariya

இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இன்றைய எபிசோடில் தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் பங்கேற்றிருக்கிறார். `பொதுவாக என் மனசு தங்கம்’ பாடலுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த மா.கா.பா வீட்டிலிருக்கும் டாப் 6 போட்டியாளர்களிடம் பிக் பாஸ் தொடர்பாக நேர்காணல் எடுப்பதற்காக வந்திருக்கிறார். பவித்ராவிடம் கேப்டன்சி வாய்ப்பை இழந்ததுக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ முத்துக்குமரன் மேல வருத்தம் இருந்தது. அந்த இடத்துல விட்டுக்கொடுத்தேங்கிற வார்த்தையை சொல்லாமல் இருந்திருக்கலாம்.” என பதில் கூறியிருக்கிறார். “இந்த வீட்டுல முத்து சேஃப் கேம் விளையாடுறாரு. கருத்து சொல்றேன்னு அவரே மாட்டிக்குவாரு” என மா.கா.பா-வின் சேஃப் கேம் குறித்த கேள்விக்கு சவுந்தர்யா பதிலளித்திருக்கிறார். டாப் 6 போட்டியாளர்களும் என்னென்ன விஷயங்களை வெளிப்படையாக சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

WhatsApp Image 2024 11 18 at 16.55.14 1 Thedalweb Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது முத்துதான்'- மா.கா.பாவுக்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள்



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *