Baby & Baby: "சீக்கிரம் கமிட் ஆகுங்க சார்..." - மேடையில் வைத்து ஜெய்யைக் கலாய்த்த யோகி பாபு! | yogi babu and jai speech at baby and baby audio launch

Baby & Baby: “சீக்கிரம் கமிட் ஆகுங்க சார்…” – மேடையில் வைத்து ஜெய்யைக் கலாய்த்த யோகி பாபு! | yogi babu and jai speech at baby and baby audio launch


ஜெய்சார்கிட்ட எப்படி சார் எப்போவும் யூத்தாவே இருக்கீங்கனு கேட்டேன். அதுக்கு அவர், சிங்களா இருக்குறதாலதான் இன்னும் அப்படியே இருக்கேனு சொல்றாரு. சீக்கிரம் கமிட் ஆகிருங்க சார்… இந்தப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. மக்களுக்குப் புடிக்கும். உங்களோட ஆதரவு எப்போவும் எங்களுக்கு வேணும்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய், “டைரக்டர் இந்தக் கதையைச் சொன்ன உடனே ஓகே சொல்றதுக்கு மூன்று பேர்தான் முக்கிய காரணம். சத்யராஜ் சார், இமான் சார், யோகிபாபு சார். இவங்க கதையைக் கேட்டு, ஃபிள்டர் பண்ணிருப்பாங்கனு தெரிஞ்சிதான் உடனே ஒகே சொன்னேன். ஷூட்டிங் நோன்பு டைம்லதான் நடந்துச்சு. ஆனா அது எனக்குச் சிரமமா இல்லை.

நடிகர் ஜெய்

நடிகர் ஜெய்

சுத்தி இருக்குறவங்க காமெடி பண்ணி சிரிச்சி வயிறு வலிக்கும்ல, அந்த வலிதான் எனக்கு ரொம்ப வந்துச்சு. நமக்கு ஏத்த மாதிரி டைலாக் மாத்திக்கலாம்னு கேட்டா டைரக்டர் ஒகேலாம் சொல்லுவார். ஆனா அவர் எடுக்குற மூணாவது டேக்ல, அவர் என்ன கேட்டாரோ அந்த டைலாக்தான் இருக்கும். அப்படியான திறமையான டைரக்டர். இந்தப் படத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்க்கு போனா ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நடிகர் இருப்பாங்க. நாம ஒரே படம்தான் நடிக்கிறோமானு நினைக்கிற அளவுக்கு நடிகர்கள் இதுல இருந்தாங்க. அந்த கேரக்டருக்கு அவங்கதான் பண்ணனும்னு சூப்பரா செலக்ட் பண்ணிருந்தாங்க. தியேட்டருக்கு படம் பார்க்கப் போனா எந்த பாரத்தையும் ஏத்திட்டு வராம, அதை இறக்கி வச்சிட்டு வர மாதிரியான படமா இது இருக்கும்” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *