அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலைமுடி உதிர்தல் இருக்காது.


அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிடங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலந்து சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். 

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாக பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலந்து பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். 

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும், குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும். 

அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும். 

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பாலில் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்கவேண்டும்.

Related Searches :

heath food 1 Thedalweb தொண்டையில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் அதிமதுரம் !!!
ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள்!(Healthy foods to gain weight)

இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.(Read more)

உணவே மருந்தே Thedalweb தொண்டையில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் அதிமதுரம் !!!
உணவே மருந்து – மருந்தே உணவு ( Food is medicine – medicine is food )

உணவே மருந்து – மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்கு என்று நமது விருப்பப் படி சாப்பிடுவதாலும் நேரத்திற்குச் சாப்பிடாமல் கண்டபடி சாப்பிடுவதாலும், நமது உடலுக்கு ஏற்காத உணவு வகைகளை நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிடுவதாலும் நமது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே இழந்துவிடுகிறது. இதனால் எளிதில் நமது உடம்பை சாதாரண நோய் முதல் தீராத நாட்பட்ட நோய்கள் தாக்கி (Read more)

12 Thedalweb தொண்டையில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் அதிமதுரம் !!!
weight loss tips at home tamil – மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும் தெரியுமா? எப்படி சாப்பிடுவது?

அஞ்சறைப் பெட்டியில் உள்ள முக்கியமான ஒரு நறுமணமிக்க பொருள் தான் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படும் சோம்பு விதைகள். இந்த விதைகள் நல்ல மணத்துடன் இருப்பதால், இச்சிறிய விதைகள் வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதோடு சோம்பு விதைகள் சில குழம்பு, ஊறுகாய் மற்றும் இனிப்பு பலகாரங்களிலும் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. (Read more)