இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம்`நிறங்கள் மூன்று’.
அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் நரேனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அதர்வா, “இந்த படத்தைப் பத்தி பேசுறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனால், பேசலாமானு தெரில. கார்த்திக் நரேனோட `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் எனக்கு பிடிக்கும். அந்த படம் பார்த்ததுல இருந்து எனக்கு அவர்கூட படம் பண்ணனும்னு ஆசை இருந்தது. அவர் ஒரு சுவாரஸ்யமான இயக்குநர். அதையும் தாண்டி அவர்கிட்ட சுவாரஸ்யமான திறனும் இருக்கு. அவர் ஒவ்வொரு காட்சியையும் எடுக்கிற விதம் ரொம்பவே தனித்துவமாக இருக்கும். இந்த படத்தோட கதையை நான் படிச்சதும் எனக்கு பயம் வந்தது.
நான் நிதர்சனத்துல எப்படி இருக்கேனோ, அதற்கு அப்படியே நேரெதிரானது இந்த படத்தோட கதாபாத்திரம். அந்த பயத்துக்குப் பிறகு கார்த்தி நரேன் மேல வச்ச நம்பிக்கைல படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். இந்தப் படம் ரொம்ப வித்தியாசமான படம். எந்த ஜானருக்குள்ளவும் இந்த படத்தை அடக்கிட முடியாது. சரத்குமார் சார்கூட இப்போதான் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறேன். அதுவும் ஒரே ஒரு நாள்தான் அவர்கூட காம்பினேஷன் ஷாட் இருந்தது. நடிகர் ரஹ்மான் சாருடைய படம் எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு நாளும் பூமா தேவி மேல பாரத்தை போடுற மாதிரி கார்த்திக் மேல பாரத்தைப் போட்டு போய் நடிச்சிடலாம்னு தோணும். இப்போ நல்ல படத்தை உங்களுக்கு கொடுத்திருக்கோம்னு நம்புறேன். படத்துல ஒரு சண்டை காட்சில முழுவதுமாக நடிச்சிட்டேன். எடிட்ல வந்து பார்க்கும்போது அது அப்படியே ரிவெர்ஸ்ல இருக்கு. இந்த மாதிரி பல புதுமையான விஷயங்கள் படத்துல இருக்கு.” என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal