Asthram: 'நான் ஜட்ஜ் ஆக இருந்தபோது சிவகார்த்திகேயன் கன்டஸ்டன்ட், ஆனா..' - நடிகர் ஷாம் பேசியதென்ன? |actor shaam talks about sivakarthikeyan

Asthram: ‘நான் ஜட்ஜ் ஆக இருந்தபோது சிவகார்த்திகேயன் கன்டஸ்டன்ட், ஆனா..’ – நடிகர் ஷாம் பேசியதென்ன? |actor shaam talks about sivakarthikeyan


நடிகர் ஷாம் தற்போது “அஸ்திரம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஷாம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “புதிய தயாரிப்பாளர், புதிய இயக்குநர் என எல்லோரும் சேர்ந்துக் கடினமாக உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். வெற்றியோ, தோல்வியோ வாழ்க்கையில் எல்லாம் மிகவும் சகஜமான ஒன்று. அதை பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். மக்களின் கையில்தான் இந்தப் படத்தின் வெற்றி இருக்கிறது. நானும் ஒரு சாதரண மனிதர்தான். எனக்கும் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருக்கும்.

ஆனால் நான் பாஸிட்டிவாக இருப்பேன். சினிமாவிற்கு வந்து 23 வருடங்கள் ஆகிவிட்டது. நிச்சயமாக இந்தப் படத்திற்காக என்னை சப்போர்ட் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்” என்றிருக்கிறார்.

மேலும், நீங்கள் நடித்த படம் ஒன்றில் ஆர்யா செகன்ட் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தின் போஸ்ட்டரை ஆர்யாவை வைத்து வெளியிட்டார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாம், ” ஆர்யா என் தம்பி. நீங்கள் என்னிடம் எப்படி கேள்வி கேட்டாலும் நான் பாஸிட்டிவாகத்தான் பதில் சொல்வேன்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *