Anurag Kashyap: "நான் தமிழ்நாட்டிலோ கேரளாவிலோ பிறந்திருந்தால்..." - அனுராக் காஷ்யப் ஓபன் டாக்

Anurag Kashyap: "நான் தமிழ்நாட்டிலோ கேரளாவிலோ பிறந்திருந்தால்…" – அனுராக் காஷ்யப் ஓபன் டாக்


`Dev.D’, `Black Friday’, `Gangs of Wasseypur’ படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப்.

நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘மகாராஜா’, ‘Rifle Club’ படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார். கொஞ்ச காலமாகவே அரசியல் குறித்தும் சினிமா சர்ச்சைகள் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

அனுராக்
அனுராக்

குறிப்பாக பாலிவுட் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணமிருக்கிறார். நடிப்புக்கான வாய்ப்புகள் கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் பக்கமிருந்தே இவருக்கு வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பாலிவுட்டை விமர்சித்து, தென்னிந்திய சினிமாவைப் பாராட்டிப் பேசியிருக்கும் அனுராக் காஷ்யப், “சமீபமாகத் தென்னிந்திய சினிமாவில் இருந்துதான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அவர்கள் என் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒருவேளை நான் தமிழ்நாட்டிலோ அல்லது கேரளாவிலோ பிறந்திருந்தால் என் கரியர் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. 32 ஆண்டுகாலமாகப் பாலிவுட்டில் இருக்கிறேன். இருந்தாலும் தனித்து, வெளி ஆளைப்போல இருப்பதாக உணர்கிறேன். தமிழ்நாடு, கேரளாவில் எனக்கு அப்படியான தனித்துவிடப்பட்ட உணர்வை ஏற்படுவதில்லை. கேரளாவில் நான் முதன்முறையாக மாஸ்டர் கிளாஸ் எடுத்தபோது அங்கு எனக்கு அளவில்லா அன்பு இருந்ததாக உணர்ந்தேன். தமிழ்நாட்டிலும் என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கிறார்கள். அதுபோல நான் எங்கும் பார்த்ததில்லை.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

இந்தி சினிமாவில் ஒரு பாதுகாப்பின்மை ஏற்பட்டிருக்கிறது. புதிதாக முயற்சிகள் எடுக்க அவர்கள் பயப்படுகிறார்கள். ஃபார்முலாக்களைத் தேடுகிறார்கள். இல்லையென்றால் எது ட்ரெண்டாக இருக்கிறதோ, அதைப் பின்பற்றுகிறார்கள். அதிலிருந்து நான் விலகியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

WhatsApp Image 2025 02 22 at 19.50.16 Thedalweb Anurag Kashyap: "நான் தமிழ்நாட்டிலோ கேரளாவிலோ பிறந்திருந்தால்..." - அனுராக் காஷ்யப் ஓபன் டாக்



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *