`மதராசப்பட்டினம்” படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு `ஐ’, `2.0′, `தெறி’, `கெத்து’, `தங்க மகன்’ எனப் பல படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹாலிவுட்டில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

இதனிடையே இவர், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் பனயிட்டோவைக் காதலித்து பின்னர், அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இவர்களுக்கு 2019யில் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் எமி மற்றும் ஜார்ஜ் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் மனஸ்தாபத்தால் பிரிந்து விட்டனர்.