Amaran : `அந்த மரியாதை இல்லைனா நான் அவங்ககூட இருக்கமாட்டேன்!' - சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்!

Amaran : `அந்த மரியாதை இல்லைனா நான் அவங்ககூட இருக்கமாட்டேன்!' – சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்!


சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருந்த `அமரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த நேர்காணலில் `சுய மரியாதை என்றால் உங்களுடைய பார்வையின் என்ன?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “ என்னை மனிதனாக நடத்துறதுதான் சுயமரியாதை. நான் அப்படிதான் பார்க்கிறேன். இங்க எல்லோரும் மனிதர்கள்தான். நான் எப்படியோ அது மாதிரிதான் நீங்க, அது மாதிரி எல்லோரும். முதலில் அதற்கான இடத்தை கொடுத்திடணும். அதன் பிறகுதான் நல்ல வேலைகளை செய்ததுப் பற்றி பேசணும். விஜய் டி.வில எனக்கு இந்த மரியாதை இருந்தது.

Screenshot 2024 02 16 20 04 06 618 com google android youtube Thedalweb Amaran : `அந்த மரியாதை இல்லைனா நான் அவங்ககூட இருக்கமாட்டேன்!' - சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்!
Sivakarthikeyan

எனக்கு அப்போ சேனல்ல பெரிய சம்பளம் கிடையாது. ரொம்பவே குறைவுதான். ஆனால் அது எனக்கு பிரச்னையில்லை. எனக்கான தளமும் மேடையும் அவங்க அமைச்சு தர்றாங்க. அதை வச்சு நான் வருவாய் ஈட்டிகிறதுக்கு முயற்சி பண்ணிடுறேன்னு ஒரு எண்ணம் எனக்கு இருந்தது. இதையெல்லாம் தாண்டி அவங்க எனக்கு மரியாதை கொடுத்தாங்க. அந்த மரியாதை எனக்கு யார் கொடுக்கலையோ யாராக இருந்தாலும் அவங்ககூட நான் இருக்கமாட்டேன். ” எனக் கூறியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *