சிவாஜி கணேசன்:
நடிகர் சிவாஜி கணேசன்தான் பத்ம விருது பெற்ற முதல் தமிழ் நடிகர். தமிழ் நடிகராக தேசிய அளவில் அப்போதே பல அங்கீகாரங்களை பெற்றார் சிவாஜி.
இப்படி சினிமாவுக்கு அவர் கொடுத்த அபரிமிதமான உழைப்பைப் பாராட்டி 1966-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 1984-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதை இவர் பெற்றார்.
எம்.கே. ராதா:
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இயங்கி வந்தவர் நடிகர் எம்.கே. ராதா. எஸ்.எஸ். வாசன் இயக்கிய “சந்திரலேகா’ திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து பல்வேறு தேசப்பற்று மிக்க கதாபாத்திரங்களில் நடித்த இவரை கெளரவிக்கும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு இவருக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த்:
ரஜினிகாந்த் சினிமாவுக்கு ஆற்றியிருக்கும் அளப்பரிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நான்கு தசாப்தங்களாக சினிமாவில் ஜொலித்து பலருக்கு ஊக்களிப்பவராக ரஜினி இருப்பதை பாராட்டும் வகையில் 2016-ம் ஆண்டு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
கமல்ஹாசன்:
கமல்ஹாசனின் பன்முகத் தன்மையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஶ்ரீ விருதும், பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 1990-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார்.