Ajith: ``நடிகர் அஜித்தின் அந்த செயல்...'' - பாராட்டிய சத்யராஜ்

Ajith: “நடிகர் அஜித்தின் அந்த செயல்…'' – பாராட்டிய சத்யராஜ்


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ் நடிகர் அஜித் குமாரைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர், “நான் 15 வயது இருக்கும் போது முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. கலைஞர் மீது காதல் வந்துவிட்டது. ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் கொடுத்தது திராவிட இயக்கங்கள்தான். தமிழ் தேசியம் ஆரியதைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல” என்று கூறியிருக்கிறார்.

F7fn3QJawAA3lVb 1 Thedalweb Ajith: ``நடிகர் அஜித்தின் அந்த செயல்...'' - பாராட்டிய சத்யராஜ்
சத்யராஜ்

தொடர்ந்து பேசிய அவர், “தம்பி அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனை கோபம் வருகிறது என்றால், அதற்கு காரணம் மதம்தான். ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது. ஆனால் அந்த மதம்தான் தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

AjithKumarbike17282020950661728202378385 Thedalweb Ajith: ``நடிகர் அஜித்தின் அந்த செயல்...'' - பாராட்டிய சத்யராஜ்
அஜித்

“மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை” என்று அஜித் அந்த வீடியோவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *