“வழக்கு எண் 18/9′, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’ போன்ற திரைப்படங்களின் மூலமாக நமக்கு பரிச்சயமான ஶ்ரீயின் சமூக வலைதளப் பக்கத்தின் பதிவுகள்தான் தற்போதைய பேச்சாக இருக்கிறது.
மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் தற்போது தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, சில பதிவுகளில் “நிலையான பாலினம் அற்றவர் (Gender Fluid) என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஶ்ரீ கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான ‘இறுகப்பற்று’ படத்தில் நடித்திருந்தார்.
அத்திரைப்படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஶ்ரீயின் நிலைக் குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறார்.