A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை அறிவித்த சாய்ரா பானு

A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்…' – ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை அறிவித்த சாய்ரா பானு


ஏ. ஆர். ரஹ்மான் உடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் அவரின் மனைவி சாய்ரா பானு.

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ. ஆர். ரஹ்மான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 29 ஆண்டு கால திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் சாய்ரா பானு.

இது குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர், “ திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் சில சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை கண்டறிந்துள்ளார். வலி மிகுந்த இந்த சூழலுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார் சாய்ரா. இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை மற்றும் புரிதலைக் வேண்டுகிறார் சாய்ரா. ” என அறிவித்திருக்கிறார்.

IMG 20241119 WA0002 Thedalweb A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை அறிவித்த சாய்ரா பானு
Ameen Instagram Story

இது குறித்து ஏ. ஆர். ரஹ்மானின் மகனான ஆமீன் , “ இந்த நேரத்தில் எங்களது ப்ரைவசிக்கு அனைவரும் மரியாதைக் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். ” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *