முக்கியமாக எஸ்.ஜே. சூர்யா வந்தது எங்களுக்கு பெரிய வரம் மாதிரி இருந்தது. இந்தப் படத்துல இருக்கிற அனைவரோட கதாபாத்திரமும் கிரே ஷேட்லதான் இருக்கும். எல்லோருக்கும் ஒரு நியாயம் இருக்கும். இவங்க நல்லவங்க, கெட்டவங்கன்னு கிடையாது. துஷாரா விஜயன் கதாபாத்திரத்தைத் தவிர எங்களோட கதாபாத்திரம் ஒரு புள்ளியில சுயநலமாகத்தான் இருக்கும்.” என்றார்.

இவரை தொடர்ந்து சுராஜ் வெஞ்சாரமூடு பேசுகையில், “என் வாழ்க்கையில முதல் முறையாக நான் போட்டோ எடுத்த ஒரு நடிகர், விக்ரம் சார்தான். `மஜா’ திரைப்படத்தோட ஷூட்டிங் சமயத்துல நானும் என் மனைவியும் அவர்கூட போட்டோ எடுத்தோம். அதன் பிறகு கொஞ்ச வருஷம் கழிச்சு, சிங்கப்பூர்ல ஒரு மால்ல விமானத்துக்கு நேரமாகிடுச்சுனு கிளம்பிட்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் `சார் நான் உங்க மிகப்பெரிய ரசிகன். ஒரு போட்டோ கிடைக்குமா’னு கேட்டாரு. அப்போ திரும்பி பார்த்தால் விக்ரம் சார் இருந்தாரு!” என்றவர் சிரித்துக்கொண்டே, “விக்ரம் சாருக்கு மேக்கப் மேன் பாம்பேல இருந்து வந்திருக்கார். ஆனால், எனக்கு மேக்கப் மேன் விக்ரம் சார்தான். எனக்கு மட்டுமில்ல நடிகர்கள் அனைவருக்கும் அவர்தான் மேக்கப் மேன்.” என்றார்.