‘கோர்ட்’ படம் பெற்றுள்ள மெகா வெற்றியால் அதன் தொடர்ச்சியான படங்களை தயாரிக்க நடிகர் நானி திட்டமிட்டுள்ளார்.
மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியாகிவுள்ள படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. 3 நாட்களில் ரூ.24.4 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் வெற்றிக்கான சந்திப்பில் நானி பேசும்போது, ‘ஹிட்’ படங்கள் போலவே அடுத்தடுத்த வழக்குகளை வைத்து ‘கோர்ட்’ படங்கள் வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொடர்ச்சியாக ‘கோர்ட்’ படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’ படத்தினை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தின் வெற்றியால் படக்குழுவினர் பல்வேறு ஊர்களுக்கு சென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு முழுக்கவே இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இருக்கும் என்று நானி குறிப்பிட்டுள்ளார்.
ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை நானி தயாரித்துள்ளார்.