பிரபு – வெற்றி இணைந்து நடித்துள்ள ‘ராஜபுத்திரன்’ திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெற்றி மற்றும் பிரபு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளனர். ‘ராஜபுத்திரன்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் கன்னட நடிகர் கோமல் குமார் வில்லனாக அறிமுகமாகிறார். 90-களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
மகா கந்தன் இயக்கியுள்ள இப்படத்துக்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒரு பாடலை டி.ஆர் பாடியிருக்கிறார். ஆர்.வி உதயகுமார் ,மன்சூர் அலிகான் ,லிவிங்ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் மகா கந்தன், “ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். அனைவரும் விரும்பக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிடித்த படமாக ராஜபுத்திரன் நிச்சயம் இருக்கும். படம் ஏப்ரலில் திரைக்கு வர இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.