மேஷம்: நல்லவர்களின் அறிமுகம் கிட்டும். அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் உண்டு. வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
மிதுனம்: சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கடகம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: மனக்குழப்பங்கள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர். அலுவலகத்தில் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
துலாம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விருச்சிகம்: வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து செயல்படுத்துவீர். மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: பிறருக்கு நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பற்றி குறை கூறவேண்டாம். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.
மகரம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள்.
கும்பம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி புது திட்டங்கள் தீட்டுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று தீர்ப்பீர்.
மீனம்: பிரச்சினைகளை தீர்க்கும் மனவலிமை பெறுவீர். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். அலுவலகரீதியான பயணங்களால் புத்துணர்ச்சி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் பெறுவீர்கள்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |