கர்நாடக அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் 16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், நடிகர்கள் சிவராஜ் குமார், கிஷோர், நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்ற, 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகின்றன. கன்னட திரைப்படம், இந்தியா, ஆசியா, உலகம் என 4 பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்திய திரைப்படப் பிரிவில், வாழை, மெய்யழகன், அமரன் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன. ஓரியன் வணிக வளாகத்தில் இப்பட விழா நடைபெறுகிறது.