`கல்லூரியில் கெத்துக் காட்டுவது மாஸ் கிடையாது. கல்வியை சரியாகப் படித்து வாழ்க்கையில் கெத்து காட்டுவதே மாஸ்’ என்கிற மெசேஜ்ஜை காமெடி, எமோஷன் கலந்து இப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. `லவ் டுடே’ திரைப்படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் மீது எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான பெர்பாமென்ஸை இப்படத்தில் கொடுத்திருக்கிறார். படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் அமீர் கானை பிரதீப் ரங்கநாதன் சந்தித்திருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவையும் போட்டிருக்கிறார் பிரதீப்.
அந்தப் பதிவில் அவர், “ நான் எப்போதும் சொல்வதைப் போல வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்களின் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி அமீர் கான் சார். இதை என் வாழ்க்கையில் என்றும் கொண்டாடுவேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.