`அமரன்’ திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்தப் படத்தை பண்ணுவதற்கு அனுமதிக் கொடுத்த முகுந்த் வரதராஜன் அவர்களின் குடும்பத்துக்கு நன்றி. 100 சதவீதம் அவராக என்னை பார்த்திருக்கமாட்டீங்க. அந்த இடத்துல என்னுடைய அப்பாவை நான் பார்த்திருக்கேன். அதுனாலதான் அந்தக் கதாபாத்திரத்துல நடிக்கிறதுக்கு இன்னும் நம்பிக்கை கிடைச்சது. இயக்குநர் ராஜ்குமார் எப்போதும் ரொம்பவே அற்புதமாக கதை சொல்வாரு. இந்தப் படத்தை அவர் சிறப்பாக எழுதியிருந்தார். அதுனால இதை படமாக பண்றதுக்கு எந்த சந்தேகமும் இல்ல. அவர் இந்தக் கதையை எழுதியவிதம்தான் இன்று இவ்வளவு பெரிய வெற்றியாக மாறியிருக்கு. சாய் பல்லவி கூட கொஞ்ச நாள்கள் நான் வேலை பார்த்திருந்தாலும் அது நல்ல அனுபவமாக இருந்தது. சாய் பல்லவி எப்படி ஒரு காட்சியை அணுகப்போறாங்கனு நேர்ல இருந்து பார்க்கபோறேன்னு விகடன் விருது விழாவுல சொல்லியிருந்தேன்.

அதை நான் நேர்ல பார்த்தேன். நான் ஸ்கோர் பண்றேனா… இல்ல சாய் பல்லவி ஸ்கோர் பண்றாங்களா’னு நான் ஒரு நாளும் பார்த்தது இல்ல. அவங்க ஸ்கோர் பண்ணினாலும் என் ஹீரோயின் ஸ்கோர் பண்றாங்கனுதான் பார்ப்பேன். அவங்களோ நானோ ஜெயிச்சு எதுவும் பண்ண முடியாது. எங்க படம்தான் ஜெயிக்கணும். படம் பார்த்துட்டு குஷ்பு மேம் கால் பண்ணி, “உங்களோட பீக் ஹீரோயிசம் என்ன தெரியுமா… நீங்க இல்லாமல் பத்து நிமிஷம் ஹீரோயின் கதையை எடுத்துட்டு போக அனுமதிச்சீங்கள்ல அதுதான்”னு சொன்னாங்க.