null
ஏ.ஆர்.ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை - உடல்நிலை குறித்து வழக்கறிஞர் அறிக்கை | AR Rahman's ex-wife: saira banu about her medical condition

ஏ.ஆர்.ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு அறுவை சிகிச்சை – உடல்நிலை குறித்து வழக்கறிஞர் அறிக்கை | AR Rahman’s ex-wife: saira banu about her medical condition


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு, மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருவதாக பானுவின் உடல்நிலை குறித்து அவரின் வழக்கறிஞரான வந்தனா ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வழக்கறிஞர் வந்தனா ஷா சாய்ராவின் உடல்நிலை குறித்து பகிர்ந்த குறிப்பில், “சில நாள்களுக்கு முன், திருமதி சாய்ராவின் மருத்துவ அவசரநிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சவாலான நேரத்தில், அவரது கவனம் முழுவதும் விரைவாக குணமடைவதில் மட்டுமே உள்ளது.

தனது சுற்றத்தாரின் அக்கறை மற்றும் ஆதரவை அவர் மிகவும் பாராட்டுகிறார். மேலும், அவர் நலனை விரும்பி அவருக்கு நல்வாழ்வு வேண்டும் என ஆதரவாளர்களிடமிருந்து அவர் பிரார்த்தனைகளைக் கோருகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தம்பதியர் தங்கள் பிரிவு குறித்து நவம்பர் 19, 2024 அன்று அறிவித்தனர். சைராவின் வழக்கறிஞரான வந்தனா ஷா தம்பதியர் பிரிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *