null
Vijay Sethupathi: ``அஜித் சாரோட நடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு!'' -விஜய் சேதுபதி

Vijay Sethupathi: “அஜித் சாரோட நடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு!'' -விஜய் சேதுபதி


`ஏஸ், டிரெயின், காந்தி டாக்ஸ்’ என அடுத்தடுத்துப் பல படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதை தாண்டி இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

சமீபத்தில் பெரம்பலூரில் ஒரு கல்லூரியில் விஜய் சேதுபதி அஜித்துடன் நடிப்பது பற்றி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நிறைய இடத்துல அஜித் சார்கூட சேர்ந்து நடிக்கிறதைப் பற்றி கேட்கிறாங்க. இதுவரைக்கு நடந்த விஷயங்கள் எதையும் நான் திட்டமிடல. எதாவது ஒரு சந்தர்பத்துல அந்த விஷயம் நடந்திடும்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி நடக்கிறதாக இருந்தது.

http photolibrary vikatan com images gallery album 2018 09 26 437369 Thedalweb Vijay Sethupathi: ``அஜித் சாரோட நடிக்கிற வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு!'' -விஜய் சேதுபதி
Vijay Sethupathi

அது நடக்காமல் போயிடுச்சு.” என்றவரிடம் `எதாவது ஸ்கிரிப்ட்டை மிஸ் பண்ணினதுக்குப் பிறகு வருத்தப்பட்டிருக்கீங்களா’ என மாணவி ஒருவர் எழுப்பினார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “ நான் ஓகே பண்ணின கதையில வேறு ஒருத்தர் நடிச்சிருக்காங்க. அதுக்கும் நான் வருத்தப்பட்டது இல்ல. இங்க எவ்வளவு பெரிய வெற்றிக் கொடுத்தாலும் அடுத்து என்ன விஷயம் பண்றீங்கனு கேட்பாங்க. ஒரு வெற்றியை வச்சு எதுவும் பண்ணப் போறதில்ல. நான் `நானும் ரெளடி தான்’, `இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, `ஜுங்கா’ போன்ற படங்களின் கதாபாத்திரங்களை என்ஜாய் பண்ணி பண்ணேன். ” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *