‘ஜன நாயகன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை இயக்க ஹெச்.வினோத் முடிவு செய்திருக்கிறார்.
விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை முழுமையாக முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். இதற்கான ஆரம்பட்ட பேச்சுவார்த்தை முடிவுற்றது.
தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணி படத்தினை லலித்குமார் தயாரிக்கவுள்ளார். தனுஷுக்கு முன்பே சொன்ன கதை தான் என்றாலும், அடுத்து தனுஷ் படம் என்ற முடிவினை ஹெச்.வினோத் இப்போது தான் எடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘ஜன நாயகன்’ படம் வெளியான பின்பு தான், தனுஷ் – ஹெச்.வினோத் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘ஜன நாயகன்’. ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.