நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். ‘அயோத்தி’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தினை கோடை விடுமுறை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஒளிப்பதிவாளராக ஹரீஷ் கண்ணன், இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின், எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்றி வருகிறார்கள். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? – காதல் என்றாலே விலகி ஓடும் நாயகன் எப்படி காதலில் வீழ்ந்தார் என்பது படத்தின் கதையாக இருக்கலாம் என்பதை டீசரின் மூலம் கணிக்க முடிகிறது. முத்தமிட்டுக் கொள்ளும் காதலர்களை எதிர்ப்பது, ‘காதலர் தினத்துக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்’ என சில விஷயங்கள் டீசரில் ஈர்க்கின்றன. வசனங்கள் பெரிதாக டீசரில் இடம்பெறவில்லை என்றாலும் படம் காதலையும், காமெடியையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு ரோம்-காம் வகையை சேர்ந்ததாக இருக்கலாம். ஜென் மார்ட்டினின் பின்னணி இசையும், ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கின்றன. ‘கிஸ்’ டீசர் வீடியோ: