STR 49 Update:  சிம்புவுடன் நடிக்கிறாரா சந்தானம்? - படத்தில் இணையும் வைரல் ஸ்டார்; லேட்டஸ்ட் அப்டேட்

STR 49 Update: சிம்புவுடன் நடிக்கிறாரா சந்தானம்? – படத்தில் இணையும் வைரல் ஸ்டார்; லேட்டஸ்ட் அப்டேட்


கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்று தன் பிறந்தநாள் ஸ்பெஷலாக மூன்று பட அறிவிப்புகளை வெளியிட்டார் சிலம்பரசன். கமலுடன் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்து ‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார்.

4S8A3142 Thedalweb STR 49 Update: சிம்புவுடன் நடிக்கிறாரா சந்தானம்? - படத்தில் இணையும் வைரல் ஸ்டார்; லேட்டஸ்ட் அப்டேட்
சந்தானம்

அதனையடுத்து அவரது 50 வது படமாக தேசிங்கு பெரியசாமி படமும், 51வது படமாக அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படமும் உருவாகிறது. இந்நிலையில் ‘எஸ்.டி.ஆர்.49’ படத்தில் சந்தானமும் இணைகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

ghhg Thedalweb STR 49 Update: சிம்புவுடன் நடிக்கிறாரா சந்தானம்? - படத்தில் இணையும் வைரல் ஸ்டார்; லேட்டஸ்ட் அப்டேட்
தேசிங் பெரியசாமி

‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 49 வது படம், காலேஜ் சப்ஜெக்ட். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கதையில் சந்தானத்தை நடிக்க வைக்க பேச்சுக்கள் நடந்து வருகிறது. ‘மதகஜராஜா’வின் வெற்றிக்கு சந்தானத்தின் காமெடி மிகப்பெரிய பங்கு வகித்தது. ஆகையால், அவரை மீண்டும் காமெடி ரோலில் நடிக்க கேட்டு வருகின்றனர். சந்தானத்தின் திரையுலக பயணத்தைத் தொடங்கி வைத்தவர் சிலம்பரசன் என்பதால், ‘எஸ்.டி.ஆர்.49’ல் நடிக்க சந்தானம் நிச்சயம் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்து வரும் சந்தானம், இதனை முடித்துக் கொடுத்துவிட்டே எஸ்.டி.ஆரின் படத்திற்கு வருவார் என்கின்றனர்.

இந்தப் படம் காலேஜ் சப்ஜெக்ட் என்பதால், படப்பிடிப்பும் கல்லூரிகளில் நடைபெறுகிறது. இப்போது கல்லூரி நடக்கும் சமயம் என்பதால், ஏப்ரல், மே மாதங்களில் இதன் படப்பிடிப்பைத் தொடங்கி, குறுகிய கால படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத்தை தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது அதில் மாறுதல் என்கிறார்கள். இப்போது டீன் ஏஜ் நபர்களைக் கவர்ந்து வரும் சாய் அபயங்கர், இந்தப் படத்திற்கு இசையமைப்பார் எனத் தெரிகிறது. ஹீரோயின் உள்பட நடிகர்கள் தேர்வு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

raa Thedalweb STR 49 Update: சிம்புவுடன் நடிக்கிறாரா சந்தானம்? - படத்தில் இணையும் வைரல் ஸ்டார்; லேட்டஸ்ட் அப்டேட்
ராம்குமார் பாலகிருஷ்ணனுடன்..

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது. அல்லது 49வது மற்றும் 51வது படம் இரண்டையுமே ஒரே சமயத்தில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர். ‘டிராகன்’ படத்தை இயக்கி முடித்திருக்கும் அஸ்வத், இயக்கும் படமும் ஃபேன்டஸி + லவ் சப்ஜெக்ட் தான். ‘காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால்…? என்ற அடைமொழியுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆக இந்தாண்டு, சிலம்பரசன் நடிப்பில் திரைக்கு வரும் படமாக ‘தக் லைஃப்’ மற்றும் ‘எஸ்.டி.ஆர் 49’ அமைந்துள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *