நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான “லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் ‘தண்டேல்’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சாய்பல்லவி தனியார் சேனலுக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதில், நடிப்பை தவிர வேறு எதில் ஆர்வம் அதிகம்? ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, “ ஓய்வு நேரத்தில் எனக்குப் பிடித்த விஷயங்களை செய்வேன். சமீபத்தில், நான் தேனீ வளர்ப்பைத் தொடங்கியிருக்கிறேன். நான் இன்னும் அதில் அவ்வளவு திறமைசாலியாகவில்லை. ஓய்வு நேரங்களில் எனக்குத் தனிமை பிடிக்கும். தனியாக இருப்பது பிடிக்கும். அப்போது திரைப்படங்களைப் பார்ப்பேன். நடனமாடுவேன்… விரும்பினால் சமைப்பேன்… அப்படி முழுமையாக சொல்ல முடியாது.