ஓடிடி தளத்திலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ‘புஷ்பா 2’ திரைப்படம்.
உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘புஷ்பா 2’ திரைப்படம். சுமார் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் இல்லாத பல்வேறு காட்சிகளை இணைத்து ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது ஓடிடி தளத்தில் உலக அளவில் தொடர்ச்சியாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ‘புஷ்பா 2’ திரைப்படம். மேலும், இதன் இறுதி சண்டைக் காட்சி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அதுவே 27 மில்லியன் பார்வைகளை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இந்த வீடியோ பதிவிற்கு பல்வேறு ஹாலிவுட் சினிமா கலைஞர்கள் தரப்பில் இருந்தும் கமெண்ட் செய்திருப்பதாக கொண்டாடி வருகிறார்கள் அல்லு அர்ஜுன் ரசிகர்கள். ஓடிடி தளத்திலும் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் இந்தியா மட்டுமன்றி உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தினை த்ரிவிக்ரம் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கு இன்னும் 2 மாதங்களாகும் என்று அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.