தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.
இதனிடையே சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்து வெற்றிபெற்றார். இந்த வெற்றியைப் பாராட்டி சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.
அஜித் ரசிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அஜித் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அஜித் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கார் ரேஸ் ஒன்றில் கலந்துகொண்ட அவர் அஜித் குறித்துப் பேசியிருக்கிறார். “அஜித் அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கவேண்டும். உங்கள் வழியைத்தான் நான் பின்பற்றி வருகிறேன்.
கடந்தமுறை நீங்கள் ரேஸில் பங்கேற்றபோது உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அடுத்தமுறை எனக்கு போன் செய்தால் உங்களுக்காக விசில் அடித்துக் கொண்டாட நான் ஓடோடி வருவேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX