Exclusive: ``அஜித்துக்கு போன் செய்த விஜய்" - உண்மையை விளக்கும் சுரேஷ் சந்திரா| ajith manager suresh chandra clarifies one news about ajith's award wishes

Exclusive: “அஜித்துக்கு போன் செய்த விஜய்” – உண்மையை விளக்கும் சுரேஷ் சந்திரா| ajith manager suresh chandra clarifies one news about ajith’s award wishes


சமீபத்தில் 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பத்ம விருது பட்டியலில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தொடர்ந்து நடித்து வருவதால் அவரின் கலைப்பணியைப் பாராட்டி இந்த விருதை அறிவித்து கௌரவித்துள்ளனர்.

இப்போது துபாயில் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்தின் அணி, 24 ஹெச். கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து அனைவரின் பாராட்டுக்களையும் குவித்தது. வரும் அக்டோபர் வரை அவர் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்துவார் அதன் பின்னர் நடிப்பில் முழு மூச்சாக இறங்குவார் என்கிறார்கள். அஜித்திற்கு விருது அறிவித்ததும், திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். அதேபோல அவரது கார் ரேஸ் அணி வெற்றி பெற்றதும் அரசியல், திரைத்துறையினர் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றபோதும் சரி, அவருக்கு விருது கிடைத்துள்ள போதும் சரி, அஜித்தின் நண்பரான விஜய் இன்னமும் அவருக்கு வாழ்த்து சொல்ல வில்லை என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், அஜித்தை வாழ்த்த விஜய்க்கு மனசில்லையா? அல்லது வாழ்த்து சொல்லக்கூட நேரமில்லையா என்பது போன்ற கமென்

ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சுரேஷ் சந்திரா

சுரேஷ் சந்திரா

இது குறித்து அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவிடம் கேட்டால், சிரிக்கிறார். “‘கொஞ்சமும் ஆதாரமில்லாத தகவல் அது. அஜித் சார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய் சாரிடம் இருந்து முதல் வாழ்த்து வந்தது. அதைப் போல சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது. இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. ஆகையால் விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மை இல்லை” என்கிறார் சுரேஷ் சந்திரா.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *