இப்ப எங்க பார்த்தாலும் பெரியார் பத்தின பேச்சாவே இருக்கே?
“பெரியார் அவர் காலத்துல பெரிய ஆளுமையா இருந்திருக்கார். தமிழர்களுக்கா, தெலுங்கர்களுக்கானு பார்க்காம திராவிடம்னு அவர் போராடினார். இன்னொரு பக்கம் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டுப் போராடினார் பிரபாகரன். இவங்க ரெண்டு பேரையும் ஒப்பிடறதே கூடாதுனு சொல்வேன். ரெண்டு பேரும் வெவ்வேறு காலங்களைச் சேர்ந்தவங்க. அண்ணன் சீமான் பிரபாகரனை உயர்த்திச் சொன்னா சிலர் கேக்கற அந்தக் கேள்வியை எனக்குமே கேக்கணும்தான் தோணுது. அதாவது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அவர் என்ன செஞ்சார்ங்கிறதுதான் அது.
என்னைக் கேட்டா பி.ஜே.பி முதல்ல தலைவர் ரஜினியை இறக்க நினைச்சது. அது ஒர்க் அவுட் ஆகலை. அடுத்து அண்ணாமலையை கூப்பிட்டுட்டு வந்தாங்க. அவருமே கட்சி குறித்துப் பேச வச்சார். ஆனா ரெண்டு சீட் பிடிக்க மூடியலை. அதனால இப்ப பெரியாரைத் தொட்டா திராவிடக் கட்சிகளைக் காலி செய்யலாம்னு நினைச்சு அண்ணன் சீமான் மூலமா அதுக்கு முயற்சிக்கறாங்களோன்னு நினைக்கத் தோணுது”